கனவுகள் வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இருந்தாலும் நம்முடைய ஆழ்மன நினைவுகளின் வெளிப்பாடு தான் கனவுகள் என்றும், நாம் உறங்கும் போது பிரபஞ்ச சக்தியும், முன்னோர்களும் நம்முடன் தொடர்பு கொண்டு நம்முடைய எதிர்காலம் குறித்த சில விஷயங்களை அறிவுறுத்துவதன் அடையாளம் தான் கனவுகள் என சொல்லப்படுகின்றன. அதிலும் அதிகாலையில் காணும் கனவுகள் மிகவும் முக்கியமானவையாகும். இவைகள் நம்முடைய எதிர்காலம் பற்றிய முக்கிய விஷயத்தை நமக்கு சொல்வதாகும்.
அப்படி சில குறிப்பிட்ட பொருட்களை உங்களுடைய கனவில் அதிகாலை வேளையில் கண்டால் அது உங்களை தேடி பணமும், செல்வ வளம் வரப் போவதற்கான அறிகுறிகள் என சொப்பண சாஸ்திரம் சொல்கிறது. இந்த பொருட்களை உங்கள் கனவில் கண்டால் சந்தோஷம், அதிர்ஷ்டம் வரும் என்றும் சொல்லப்படுகிறது.
அதிர்ஷ்டம் தரும் கனவுகள் :
* தெளிவான வானம் – தெளிவான, நீல நிற வானத்தை உங்கள் கனவில் கண்டால் உங்களின் பணக் கஷ்டம் தீரப் போவதாக அர்த்தம். உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறப் போவதாக அர்த்தம்
* பூ மாலை – பொதுவாக பூக்களை கனவில் காணுதல் நல்லதாக கருதப்படுகிறது. மங்கலத்தின் அடையாளமாக கருதப்படும் பூ மாலைகளை கனவில் கண்டால் வெற்றிகளும், அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரப் போவதாக அர்த்தம். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.
* பசுமையான வயல்கள் – பசுமையான வயல்வெளிகளை கனவில் காண்பது வெற்றிக்கான அறிகுறியாகும். விரைவில் உங்களின் வாழ்க்கை பசுமையாக மாறப் போகிறது, நிதி நிலை உயரப் போகிறது, உங்களின் கடின உழைப்பிற்கும் முயற்சிக்கும் ஏற்ற பலன் மிக விரைவிலேயே கிடைக்க போகிறது என்று அர்த்தம்.