ஜனவரி 29ம் தேதியான நாளை, தை அமாவாசை ஆகும். இந்நாளில் ஒரு சிறப்பு இருக்கிறது. அதுதாங்க அபிஜித் நட்சத்திரம்.
அது என்ன அபிஜித் நட்சத்திரம் என்று கேட்பவர்களுக்கு.. அபிஜித் நட்சத்திரத்தைப் பற்றிய சிறிய தகவல்
மாதம்தோறும் ஒரு முறை அல்லது இரண்டு முறை இந்த அபிஜித் நட்சத்திர நேரம் வரும். இந்த வருடம் ஜனவரி 29ஆம் தேதி தை16 தை அமாவாசை அன்று அபிஜித் நட்சத்திரம் வருகிறது. அபிஜித் நட்சத்திர நேரம் 29ஆம் தேதி புதன்கிழமை காலை 8:08 மணி முதல்8:32 நட்சத்திரம் உள்ளது.
நட்சத்திர வரிசையில் இந்த நட்சத்திரம் 28 ஆவது நட்சத்திரம் ஆகும். அதெப்படி 27 நட்சத்திரம் தானே உள்ளது என்று கேள்வி வரும். காரணம் உள்ளது. 28 ஆவது நட்சத்திரமாக இருக்கும் அபிஜித் நட்சத்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நட்சத்திரத்தை மனிதர்களிடம் கொடுத்தால் அவர்கள் தவறாக பயன்படுத்துவர் என்று கிருஷ்ண பரமாத்மா அபிஜித் நட்சத்திரத்தை தன் மயில் இறகில் ஒளித்து வைத்தார் என்று புராணக் கதைகள்சொல்கின்றன.
உத்திராட நட்சத்திரம் மற்றும் திருவோண நட்சத்திரத்திற்கு இடைப்பட்ட 20 நிமிட நேர காலம் தான் அபிஜித் நட்சத்திர நேரம். அபிஜித் முகூர்த்தம் என்பதும் அபிஜித் நட்சத்திரம் என்பதும் வேறு வேறு. அபிஜித் முகூர்த்தம் என்பது தினந்தோறும் மதியம்11:45 மணி முதல்12:15 மணி வரை வரும். இந்நேரத்தில் வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
குடும்ப நலன், பிள்ளைகள் படிப்பு, வேலை, திருமணம், நோய் நொடி தீர, கடன் பிரச்சினைகள், குழந்தையின்மை போன்ற எந்த வகை பிரச்சனைகளையும் இறைவனிடம் இந்த அபிஜித் நேரத்தில் வேண்டுதல் செய்வது மிகவும் சிறப்பு. அபிஜித் நட்சத்திர நேரத்தில் ஒரே மாதிரி பிரார்த்தனை வைத்து மாதந்தோறும் வரும் அதே நேரத்தில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.
ஹனுமன் மந்திரம் சொல்ல வேலை கிடைக்கும். மகாலட்சுமி மந்திரம் சொல்ல சொந்த வீடு அமையும், கடன் சுமை குறையும், லட்சுமி கடாக்ஷம் உருவாகும். குபேரன் மந்திரம் சொல்ல பண வரவு அதிகரிக்கும், நிலைத்த செல்வம் கிடைக்கும். அவரவர்களுக்கு தெரிந்த மந்திரங்களை கூறலாம். குலதெய்வத்தையும், முன்னோர்களையும் வழிபட இந்த 20 நிமிடம் மனதை ஒருநிலை படுத்தி நம்பிக்கையோடும் பக்தியோடும் பிரார்த்தனை செய்து நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கு பிரபச்சத்திற்கு நன்றி கூறி வழிபட நமக்கு நல்லதே நடக்கும்.
அன்று சமைக்கும் உணவில் பருப்பு, வெண்பூசணி, மஞ்சள் பூசணி, வாழைக்காய் சேர்த்து சமைப்பது சிறப்பு. பிரச்சனை இல்லாத வாழ்வும் இல்லை நாம் வாழும் வாழ்க்கையிலும் இல்லை. எனவே முழு மனதோடு பிரார்த்தனை செய்வோம் இன்புற்று வாழ்வோம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.