ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எமது விருப்பப்படி சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் யோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் வரவு, செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டால் எமது செயற்பாடுகள் முன்னோக்கிச் செல்லும் எனவும் யோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், தற்போது கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உறுதியான தீர்வை வழங்க வேண்டும் எனவும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,