துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை கொழும்பு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.
சந்தேக நபர் நேற்று (04) பிற்பகல் மட்டக்குளிய கந்திரானவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, அவர் வசம் இருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றையும் பொலிசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுவெல, மேல் போமிரிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.