நம்முடைய முன்னோர்கள் நமக்கு 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று ஆசீர்வாதம் செய்வார்கள். ஆனால் இன்றைய காலத்தில் யாரும் பதினாறு செல்வங்களை பெற்று வாழ்கிறார்கள் என்று கூற முடியாது. இப்படி 16 செல்வங்களையும் பெறுவதோடு பணவரவில் இருக்கக்கூடிய தடைகளை நீக்கி நல்ல ஒரு முன்னேற்றகரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.
அதிலும் குறிப்பாக ஏகாதசி மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபாடு செய்யும் பொழுது நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதம் வரக்கூடிய ஏகாதசி என்பது சனிக்கிழமையோடு வளர்பிறை ஏகாதசியாக வருவது கூடுதல் சிறப்பு மிகுந்தது. இந்த நாளில் நம் பெருமாள் ஆலயத்திற்கு சென்று எந்த முறையில் வழிபாடு செய்தால் அனைத்து விதமான செல்வங்களையும் பெற முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பெருமாள் வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இந்த பணம் வரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்க வேண்டும் என்று நினைத்தாலும் வீட்டில் பணத்தை தவிர்த்து நிம்மதி இல்லை, சந்தோஷம் இல்லை, குழந்தை பாக்கியம் இல்லை, சுபக்காரிய தடைகள் உண்டாகிக்கொண்டே இருக்கிறது, குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவில்லை, உடல் ஆரோக்கியம் இல்லை என்று புலம்புபவர்களும் மறவாமல் தை மாதத்தில் வரக்கூடிய இந்த வளர்பிறை ஏகாதசி நாளன்று பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டை அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்தில் செய்வது மிகவும் சிறப்பு. காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து ஆண்கள் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். பெண்கள் மஞ்சள் பூசி குளிக்க வேண்டும். காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று 16 நெய் தீபங்கள் ஏற்றி வைத்து பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு ஆலயத்திலேயே அமர்ந்து பின்வரும் இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.
ஒரு வேளை ஆலயத்திற்கு செல்ல இயலாது என்பவர்கள் வீட்டில் பெருமாளின் படத்திற்கு முன்பாக ஒரு தாம்பாளத்தை வைத்து அதில் நவதானியங்களை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்தும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.
ஒரு வேளை காலையில் இந்த வழிபாட்டை செய்ய இயலவில்லை என்று நினைப்பவர்கள் இரவு உறங்கச் செல்வதற்கு முன் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை தண்ணீரில் போட்டு அந்த தண்ணீரை பயன்படுத்தி குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் அமர்ந்து இந்த மந்திரத்தை பெருமாளை நினைத்து உச்சரிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பெருமாளின் பரிபூரண அருளை பெறுவதோடு நமக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும்.வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.




















