இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தால் இன்று தியகம மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஈட்டி எறிதல் தெரிவு போட்டியில் சுமேத ரணசிங்க 82.56 மீற்றர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்துள்ளார்.
இது 2025 ஆம் ஆண்டில் உலகில் ஈட்டி எறிதல் வீரர் ஒருவர் எட்டிய அதிக தூரமாக கருதப்படுகிறது.
அதற்கமைய, இந்த ஆண்டில் மிக நீண்ட ஈட்டி எறிதல் தூரமாக பதிவாகியிருந்த 75.85 மீற்றர் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
இத்தாலியைச் சேர்ந்த ஜியோவானி ஃப்ராட்டினி இந்த சாதனையை தமதாக்கியிருந்தார்.