மூத்த ஊடகவியலாளர் ராஜநாயகம் பாரதி சுகவீனம் காரணமாக இன்றைய தினம்(9) காலமானார்.
தமிழ் ஊடக பரப்பில் பாரதி என அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளரான இவர் சுகவீனம் காரணமாக காலமானார்.
கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த நிலையிலே இன்றைய தினம் வீட்டில் காலமானார்.
தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பின் ஆசிரியராகவும், இறுதியாக வீரகேசரியின் யாழ் பிராந்திய பொறுப்பாசிரியராகவும் ராஜநாயகம் பாரதி கடமையாற்றிவந்திருந்தார்.
இளம் ஊடகவியலாளருக்கு ஒரு நம்பகமான, நல்ல வழிகாட்டியாகவும் பண்பான மனிதராகவும் விளங்கிய பெருந்தகை இவர்.



















