சினிமாவில் கடந்த சில வருடங்களில் மட்டுமே ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது.
ஒரு 90-களில் நடிகைகள் 30 வயதை நெருங்கி விட்டாலே அவர்களுக்கு பட வாய்ப்பு மறுக்கப்படும்.
இதனால் அவர்களின் மார்கட் குறையும் பொழுது நடிகைகள், தொழிலதிபர், இயக்குனர், மற்றும் மாப்பிள்ளையை காதலித்து திருமணம் செய்து செட்டில் ஆகி விடுகிறார்கள்.
முன்பு இருந்தது போல் அல்லாமல் நடிகைகளின் அழகை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களுக்குள் இருக்கும் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமாவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
40 வயதாலும், குழந்தைகள் பிறந்தாலும் இன்றும் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள். அவர்களை வைத்து படம் இயக்குவதில் இயக்குநர்களும் எந்தவித தயக்கமும் காட்டுவதில்லை.
அந்த நடிகை யார் தெரியுமா?
இந்த நிலையில், 5000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சாய் பல்லவிக்கு தற்போது கோடிகளில் சம்பளம் வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
மேக்கப் தான் வாழ்க்கை என வாழ்ந்து வரும் நடிகைகளுக்கு மத்தியில் இயற்கையான அழகிலும் சாதிக்க முடியும் என்பதனை சாய்பல்லவி செய்து காட்டியுள்ளார்.
தற்போது “லேடி பவர் ஸ்டார் சாய்” என தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் சாய் பல்லவியின் படத்தேர்வுகள் சிறப்பாக இருக்கின்றன.
கடந்த வாரம் இவர் மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யா கூட்டணியில் வெளியான “தண்டேல்” திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது. நாளுக்கு நாள் சாய் பல்லவிக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.