இந்தியாவில்(india) உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) பணியாளர்கள், ரூ.2.12 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இரண்டு இலங்கைத் தமிழர்கள் (sri lankan tamils)உட்பட மூன்று பயணிகளை கைது செய்தனர்.
சந்தேக நபர்கள் இலங்கையைச் சேர்ந்த விமல்ராஜ் துரைசிங்கம் மற்றும் திலீபன் ஜெயந்திகுமார் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த வீர குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான செயற்பாடு
அதிகாரிகளின் கூற்றுப்படி, CISF இன் குற்றம் மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த விஷால் குமார், மூவரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையைக் கவனித்து விசாரணையைத் தொடங்கினார்.
அவரது விசாரணையில், யூரோக்கள், அமெரிக்க டொலர்கள், ரியால்ஸ் மற்றும் பிற மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் அவர்களிடம் இருந்து கணிசமான அளவு பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமுலாக்க இயக்குனரக அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை மேலும் விசாரணைக்காக காவலில் எடுத்தனர்.
அதிகாரிகள் இப்போது நாணயத்தின் மூலத்தை ஆராய்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு பெரிய கடத்தல் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்தார்களா என்பதைக் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர்.