மொனராகலை, செவனகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹகம ஜனபதய பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் ஞாயிற்றுக்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளதாக கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை, செவனகல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக செவனகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















