புதுக்கடை நீதிமன்றத்தின் 5 ஆம் இலக்க நீதிமன்ற அறைக்குள் பாதாள உலகத் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அதுருகிரிய பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல தோட்டாக்கள் மற்றும் ஒரு சொகுசு கார் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12-போர் ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஏழு தோட்டாக்கள், M16ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா, ஒரு மின்னணு தராசு மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியவையும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த கொலை சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட எட்டு பேர் கைது இதுவரை செய்யப்பட்டுள்ளனர்.