தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் நடவடிக்கையால் இலங்கை கடற்படையினரால் அவர்கள் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாம்பன் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும். மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன் பிடித்ததாகக் கூறி இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணைக்கு பின் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர். அவர்கள் 14 பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.