பாடகி கல்பனா உயிரை மாய்த்துக் கொள்ள தவறான செயலில் ஈடுபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், தற்போது இதுகுறித்த உண்மை தெரியவந்துள்ளது.
பாடகி கல்பனா
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் கடந்த செவ்வாய்கிழமை தனது வீட்டில் மயங்கிய நிலையில், மீட்கப்பட்டு, உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு மருததுவமனையில் அனுமதித்தனர்.
அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு தவறான முடிவு எடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் கல்பனாவின் மகள் தயா பிரசாத், தனது தாய் உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதிகளவில் மாத்திரை எடுத்துக் கொண்டதால் இவ்வாறு மயங்கியதாக கூறினார். இந்நிலையில் கல்பனா அளித்துள்ள விளக்கம் வைரலாகி வருகின்றது.
பாடகி கல்பனா அதிகளவு தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு மயங்கி விழுந்த நிலையில், அதற்கு முன்பு தனது கணவருக்கு போன் செய்துள்ளார்.
அவர் போன் எடுக்காத நிலையில், பக்கத்தில் உள்ளவர்களுக்கு போன் செய்ததாகவும் அவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறப்படுகின்றது.
ஆனால் கல்பனா பொலிசில் அளித்துள்ள விளக்கத்தில், இரவில் எப்பொழுதும் தூக்க மாத்திரை எட்டு எடுத்துக் கொள்வதாகவும், ஆனால் குறித்த தினத்தில் மாத்திரை எடுத்துக் கொண்டும் தனக்கு தூக்கம் வராததால், மேலும் 10 மாத்திரைகளை உட்கொண்டதால் சுயநிலை இழந்ததாகவும் கூறியுள்ளார்.
பின்பு என்ன நடந்தது என்று தனது நினைவில் இல்லை என்று வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். கல்பனாவின் மகள் தயா பிரசாத்துடன் கல்வி தொடர்பான கருத்து வேறுபாடு இருந்ததாக தெரியவந்துள்ளது.
கல்பனா தனது மகளை ஹைதராபாத்தில் படிக்க விரும்பினார். ஆனால் தயா அத்ற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், மார்ச் 3ம் தேதி இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இசைக்குடும்பத்தை சேர்ந்த கல்பனா தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையை கடந்துவிட்டதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.