தங்கத்தை விட உலகின் மிகவும் விலையுயர்ந்த உலோகமான வைரமானது எந்த நாட்டில் இருக்கின்றது என்பதையும் இதன் முழு விளக்கத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
வைர சுரங்கம் உள்ள நாடு
உலகில் தங்கத்தை விட வைரத்திற்கு அதிக மதிப்பாக இருக்கிறது. சாதாரண மக்களால் இந்த வைரத்தை வாங்க முடியாது. இது அதிக விலையில் விற்கப்படும் ஒரு உலோகமாகும்.
அந்த வகையில் உலகின் மிகவும் முக்கியமான வைர சுரங்கங்களில் ஒன்று போட்ஸ்வானாவில் உள்ள ஜ்வானெங் வைரச் சுரங்கமாகும். இது உலகின் பணக்கார வைரச் சுரங்கம் என்று அழைக்கப்படுகிறது.
காரணம் இதன் மதிப்பு £1 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மற்றைய நாடுகளை விட அதிக மதிப்பு கொண்டது. இந்த சுரங்கம் போட்ஸ்வானாவின் தலைநகரான காபோரோனுக்கு தென்மேற்கே சுமார் 170 கிமீ (105 மைல்) தொலைவில் உள்ள ஒரு பழங்கால எரிமலைப் பள்ளத்திற்குள் அமைந்துள்ளது.
இதை கிம்பர்லைட் குழாய் எனப்படும் எரிமலைப் பாறையின் மேல் அமைந்துள்ளது எனவும் சொல்லலாம். ஜ்வானெங் வைர சுரங்கம் உயர் தொழில்நுட்ப நடவடிக்கையை பயன்படுத்தி செய்யப்படுகின்றது.
இதில் ஜ்வானெங்கின் Completely Automated Recovery Plant (CARP) மற்றும் Fully Integrated Sort House (FISH) ஆகியவை அதிநவீன நுட்பங்களைப் பயன்படுத்தி அதிநவீன துல்லியத்துடன் வைரங்களை அடையாளம் கண்டு பிரித்தெடுக்கப்படுகின்றன.
இந்த சுரங்கத்தால் நாட்டின் பொருளாதாரம் இன்னும் எதிர்காலத்தில் வலுவாகும். எதிர்காலத்தில் £20 பில்லியன் ($25 பில்லியன்) ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.