வெளிநாடுகளுக்கு மலிவான விமான டிக்கெட்டுகளை வழங்குவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்த பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த 2 முறைப்பாடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான டிக்கெட்டுகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து முறைப்பாட்டாளர்களிடம் பணம் பெற்ற இந்தப் பெண், நீண்ட காலமாக அவர்களைத் தவிர்த்து வந்துள்ளதாக கொழும்பு மோசடி புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பண மோசடி
சந்தேக நபரான பெண் தங்களிடம் இருந்து 6.5 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறைந்த செலவில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பாரிய மோசடி | Sri Lankan Woman Arrested For Defrauding People
கைது செய்யப்பட்டுள்ள பெண்ணை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



















