ஹபரணை-மரதன்கடவல வீதியில் கலபிட்டகல பகுதியில் லொறியுடன் மோதி காயமடைந்து ஒற்றை தந்தம் உடைந்த நிலையில் காணாமல் போயிருந்த யானை, நேற்று (14) காலை திரப்பனை பிரதேச செயலகப் பிரிவின் லபுனொருவ பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு அருகில் வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹபரணை – மரதன்கடவல வீதியில் உள்ள கலபிடகல பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (07) அதிகாலை லொறியுடன் மோதி வலது தந்தத்தை இழந்த யானைத் தேடுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் பல குழுக்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன்படி லபுனோருவ பகுதியில் உள்ள ஒரு ஏரியின் அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த யானை நேற்று காலை வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த யானை தற்போது கூட்டத்துடன் இருப்பதாகவும், யானைக்குத் தேவையான சிகிச்சையை பந்துலகம வனவிலங்கு மருத்துவக் குழு மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.