ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகக் தெரிவித்துள்ளார்.
இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பதுடன், முன்னர் ஏறாவூர் நகரசபைத் தலைவராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.