21 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 100 கிராம் ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, அனுராதபுரம் பொலிஸார் குறித்த பகுதியில் நடத்திய விசாரணையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் அனுராதபுரம், திசாவெவவ நிராவிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என்பதுடன், சந்தேக நபர் நாளை (16) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.