யாழ்ப்பாணம் கொக்குவில் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று(14) இடம்பெற்ற இச்சம்பவத்தில் 53 வயதான ஆசிரியரே உயிரிழந்தவராவார். பாடசாலையில் மாணவர்களின் பெற்றோர்களுடனான சந்திப்பு நடந்து கொண்டிருந்தபோது, ஆசிரியை திடீரென மயக்கமுற்று விழுந்துள்ளார்.
உடனடியாக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மாரடைப்புக் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.