கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக மூன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, சிறீலங்கா சுதந்திரக்க கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.
இந்நிலையில், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான வேட்பு மனு இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனு எதிர்வரும் 24ம் திகதி முதல் -27ம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.