மியன்மாரின் – மியாவதியில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் மேலும் சிலர் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 14 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களைத் தாய்லாந்தில் உள்ள பாதுகாப்பான இடமொன்றுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.