பண மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என்று காட்டிக்கொண்டு சில நபர்கள் இவ்வாறு மோசடியில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம் சிக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் சமில் முத்துக்குட வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், பண்டிகை காலத்திற்கான சந்தை சோதனைகள் நாளைய தினம் (24.03.2025) முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.