இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதற்கு பயிற்சியின் போது ஏற்பட்ட தவறே காரணம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலை ஆய்வுச் சுற்றுலாவொன்றில் நேற்றையதினம்(23.03.2025) கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாரியபொல, மினுவாங்கொட பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K8 பயிற்சி விமானம் கடந்த 21ஆம் திகதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், விமானத்தின் வயது மற்றும் இயந்திரத்தில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
விமானத்தில் பயிற்சிக்கு போனவர்கள் செய்த தவறே விபத்துக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



















