யாழ். பருத்தித்துறை பிரதான வீதி, கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள வாய்க்காலில் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலத்தில் உள்ளவர் அந்தப் பகுதியை சேர்ந்தவர் இல்லை என்றும், யாசகம் பெறுபவராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அவரது வயது 70 – 75 வரை இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
அவரது உறவினர்கள் யாராவது வந்து சடலத்தை இனங்காணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.