அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை (10) இரவு பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் அடையாள அணிவகுப்புக்காக அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (28) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அண்மையில் 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அடையாள அணிவகுப்புக்காக இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேக நபரை அடையாளம் காட்டுவதற்காக, பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியரும் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















