பாதாள உலகக்குழு உறுப்பினரான ‘ரொட்டும்ப அமில’ என்ற அமில சம்பத் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் சட்ட அமுலாக்கத்துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கையின் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.