சுவிட்சர்லாந்தின் வோ மாகாணத்திலுள்ள வேவே நகரத்தில் கடை ஒன்றில் திருட முயன்ற 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அந்தக் கடை பூட்டியிருந்த நிலையில், சிறுவன் உள்ளே நுழைய முயன்றபோது sliding door கதவில் அவனது தலை சிக்கிக்கொண்டது. கடந்த சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பொலிசார் அவனை கண்டுபிடித்தனர்.
உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் அவனை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும், சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தாக கூறப்படுகின்றது.