கொழும்பின் புறநகர் பகுதியான மட்டக்குளிய பகுதியில் சீமெந்து கலந்து போலி முடி சாயம் தயாரிக்கப்பட்ட இடத்தை நுகர்வோர் விவகார அதிகாரசபை சுற்றிவளைத்துள்ளது.
சுமார் 28 மில்லியன் ரூபாய் சந்தை மதிப்புள்ள போலி முடி சாயத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகளின் விசாரணையில், பிரபல தயாரிப்புகளின் காலாவதியான மற்றும் சேதமடைந்த முடி சாயம் பாக்கெட்டுகளை சீமெந்து பவுடருடன் இயந்திரத்தில் கலந்து, பிரபல நிறுவனங்களின் பெயர்களில் உள்ள பொதிகளை பயன்படுத்தி போலி முடி சாயம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிகாரசபை
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.