ஏப்ரல் மாதத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் மதுபானக் கடைகள் மூடப்படுவது குறித்து கலால் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தீவு முழுவதும் மதுபான சில்லறை விற்பனைக்காக கலால் திணைக்களத்தால் உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகளும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நாட்களில், சுற்றுலா அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட ஏழு நட்சத்திர ஹோட்டல் உரிமம் உள்ள ஹோட்டல்களில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே மதுபானம் வழங்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.