உலக சந்தையில் எண்ணெய் விலை இன்று(04) 8 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
இது கோவிட் தோற்று உச்சத்தில் இருந்த 2021ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிகப்பெரிய வீழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் வர்த்தக பதற்றங்கள் உலக சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஏற்கனவே சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் புதிய வரிக் கொள்கைக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என்று சீனாவின் நிதி அமைச்சகம் அறிவித்தது.
அத்துடன், ஏனைய சில நாடுகளும் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தத்தமது புதிய வரிக் கொள்கைகளை தயாரித்து வருகின்றன.
இந்த வர்த்தக பதற்றம், அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மை மற்றும் பரந்த பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என பொருளியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்குறிப்பிட்ட அனைத்து காரணிகளும் இணைந்து உலக சந்தையில் எண்ணெய் விலையில் சரிவை ஏற்படுத்தியுள்ளன.