கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்றைய வர்த்தக நாள் நிறைவில் (08) கணிசமான மீட்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 467.26 புள்ளிகள் உயர்ந்து, 15,127.71 புள்ளிகளை பதிவு செய்துள்ளது.
இது முந்தைய நாள் முடிவை விட குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டுகிறது.
இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 2.89 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும், பங்குச் சந்தை வீழ்ச்சியால் கொழும்பு பங்குச் சந்தை மற்றும் சந்தை மூலதனம் 435 பில்லியன் ரூபாய் குறைந்தமை குறிப்பிடத்தக்கது.