அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட ஏப்ரல் மாத வேதனத்தை நாளை மறுதினம் வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணத்தின் அடிப்படையில், பாதீட்டில் திருத்தம் செய்யப்பட்ட வேதனத்தை அன்றைய தினம் வழங்க முடியாவிட்டால், அந்த நிலுவைத் தொகையை ஏப்ரல் 25 ஆம் திகதியன்று வழங்க வேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.