ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (08) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறியதும் 22ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களை பெற்று சென்னை அணிக்கு 220 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் நிறைவில் 05 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.