சுவிட்சர்லாந்தில் நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த இளைஞன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் 30ஆம் திகதி சூரிச்சின் Dietikon பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. இதன்போது ஏற்பட்ட வன்முறை மோதலில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 30ஆம் திகதி சூரிச்சின் Dietikon பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. இதன்போது ஏற்பட்ட வன்முறை மோதலில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபரின் மிகவும் நெருக்கமான நண்பரும் அதே மேல் மாடியில் வசிப்பவருமான 30 வயதுடைய சந்தேக நபர் அதே நாளில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து, கடந்த வாரம் இலங்கையைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.