கடந்த இரு தினங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளுக்குள் இந்த வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 297,736 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்ததாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மேற்படி காலகட்டத்தில், அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 10 கோடியே 23 இலட்சத்து 78,800 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 11 ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலையில் 163,541 வாகனங்கள் பணித்ததாகவும், அதன் ஊடாக 54,066,450 ரூபா வருமானம் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஏப்ரல் 12 ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலையில் 134,195 வாகனங்கள் பயணித்ததாகவும், அதன் வருமானம் 47,012,350 ரூபா எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.