உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், புனித பாப்பரசர் போப் பிரான்சிஸ் காலமானதாக வத்திக்கான் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை காலை காலமானார் என்று வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்தார். “இன்று காலை 7:35 மணிக்கு, ரோம் பிஷப் பிரான்சிஸ், தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார்.
அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது,” என்று ஃபாரெல் அறிவிப்பில் கூறினார்.
அண்மையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப், தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் போப்பின் மறைவு உலக வாழ் கத்தோலிக்க மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.




















