விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட நீதிமன்ற நீதவான் நுஜித் டி சில்வா இன்று இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் செல்வதற்கு அனுமதித்து பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















