இலங்கை சினிமாவின் ராணி என்று போற்றப்படும் மாலினி பொன்சேகா காலமானார்.
தனது 78வது வயதில் அவர் இன்று(24) கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
அத்துடன் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டார்.
பைலட் பிரேமநாத் என்ற இந்திய- இலங்கை கூட்டுத் திரைப்படத்தில் அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் கதாநாயகியாக நடித்ததன் மூலம், தமிழ் இரசிகர்களிடையே அவர் பேசப்படும் ஒருவரானார்.