நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை குறித்து சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி விளக்கம் அளித்துள்ளார்.
180 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் வைத்தியசாலைகளில் நாற்பது வகையான மருந்துகளுக்கு மாத்திரமே பற்றாக்குறை இருப்பதாக பிரதி அமைச்சர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,
“மருந்துகளின் பற்றாக்குறை இருப்பதாக நாங்களும் கூறுகிறோம். அது பல ஆண்டுகளாகவே உள்ளது. பொருளாதாரப் பிரச்சினைகள் வந்த பிறகு, மருந்துகளின் பற்றாக்குறை இன்னும் அதிகரித்தது.”
நெரிசல் இன்னும் இருக்கிறது. இதன் காரணமாக, எங்கள் விநியோகச் வலையமைப்பில் அவ்வப்போது பலவீனங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக சுமார் 150 முதல் 180 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை இருக்கும்.
நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். இந்தப் பற்றாக்குறை முழு நாட்டிலும் ஏற்படவில்லை, ஆனால் நமது பிரதான களஞ்சியசாலையில் ஏற்படுகிறது.
இதற்குக் காரணம், ஒரு மருந்து இலங்கைக்கு வந்த உடனயே, அதை விரைவாக விநியோகிக்கவே எதிர்பார்க்கப்படுகிறது.
வைத்தியசாலை மட்டத்தில், சுமார் நாற்பது மருந்துகளின் பற்றாக்குறை உள்ளது. நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை.
“கடந்த ஆண்டு அனைத்து மருந்துகளுக்காக ஒதுக்கியதை விட இந்த முறை பிராந்திய கொள்முதல்களுக்கே அதிக பணம் ஒதுக்கியுள்ளோம்.”
நமது பிரதான மருந்து களஞ்சியாலையில் கிடைக்கும் ஒரு மருந்து என்றாலும் எதிர்காலத்தில் அதற்கு பற்றாக்குறை ஏற்பட்டால் வைத்தியசாலை அதிகாரிகள் அதை வாங்கலாம்.
“அது நடந்தால், மருந்து பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.”
“இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி, பிரதான மருந்துக் களுஞ்சியசாலையில் பாதுகாப்பான இருப்பைப் பராமரிப்பதாகும்.”
பிரதான களுஞ்சியசாலையில் பாதுகாப்பான இருப்பைப் பராமரிப்பது, விநியோக இடையூறுகள், டெண்டர் முறைகள் போன்றவற்றால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும்.
அமைச்சர்களாகிய நாங்கள், அவசர கொள்முதலாக மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு இடைப்பட்ட பாதுகாப்பு இருப்பை வழங்க அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளோம்.
அதை மிகவும் சட்டப்பூர்வமான முறையில் செய்வதற்கு”அதை வைத்துக்கொண்டு தான் ‘நாங்கள் தரமற்ற மருந்துகளை கொண்டு வரப் போகிறோம்’ என்று சொல்கின்றனர்” என்றார்.



















