ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேர்த்தனர். அதிலிருந்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் அதிகரித்துள்ளது.
ரவி மோகன் கெனிஷா
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். அதிலிருந்து பல சர்ச்சைகளை வெடிக்க தொடங்கியது.
அதன் பிறகு ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வந்தனர். இதனால் இவர்களை பற்றி அனைவரும் அதிகமாக பேசி வந்தனர்.
பாடகி கெனிஷா குறித்து ரவி மோகன் தெரிவிக்கையில், “ஜெனிஷா வந்த பிறகு தனது வாழ்க்கை மாறி உள்ளது. அவருடன் பயணிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் நீதிமன்றமும் உங்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சனை குறித்து இனி சமூக வலைதளங்களில் அறிக்கை விடக்கூடாது என்று ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பாடகி கெனிஷா தனது instagram பக்கத்தில், “பாலியல் மிரட்டல், ஆபாச பேச்சு, கொலை மிரட்டல் விடுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். என்னைப் பற்றி அவதூறுகளை அனுமதிக்க மாட்டேன். சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.




















