நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுபத பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, கைதான சந்தேகநபரிடமிருந்து 57 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



















