போலந்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக 42 வயதான கரோல் நவ்ரோக்கி (Karol Nawrocki) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
போலந்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், Karol Nawrocki 50.9 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 18 ஆம் திகதி குறித்த தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இடம்பெற்றிருந்ததுடன், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள் நேற்றைய தினம் நிறைவடைந்தன.
தொடர்ந்து இன்று காலை வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்த நிலையில், போலாந்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக கரோல் நவ்ரோக்கி (Karol Nawrocki) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.




















