வெற்றிலையுடன் சில சமையலறை பொருட்களை சேர்த்து கரப்பான் பல்லி எறும்பு போன்றவற்றை விரட்ட முடியும்.
உங்கள் வீட்டில் பல்லிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்தால் அதை விரட்டுவது எப்படி என்ற யோசனை இனிமேல் வேண்டாம்.
இதற்கு இரசாய கலவை வேண்டாம். 100% இயற்கையான முறையில் ஒரு பொருளை தயாரிக்கலாம். முதலில் வெற்றிலை பூண்டு வினிகர் (சமையலுக்குப் பயன்படுத்துவது) தண்ணீர் பயன்படுத்தாத மாத்திரைகள் (எ.கா: பாராசிட்டமால், டோலோ) பிஸ்கட்/பிரட் தூள்/கேக் தூள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இடிப்பதற்கு தகுந்த பொருள் ஒன்றை எடுத்து இரண்டு பூண்டு பற்களை எடுத்து நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் வெற்றிலை ஒன்றை சேர்த்து நன்றாக நசுக்க வேண்டும்.
பின்னர் இதை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்து, சூடான நீரை சேர்க்கவும். பூண்டு மற்றும் வெற்றிலையின் சாறு தண்ணீரில் இறங்க வேண்டும்.
பின்னர் வினிகர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை 2 மணிநேரம் அப்படியே மூடி வைக்க வேண்டும்
இரண்டு மணி நேரம் கழித்து, இந்த கரைசலை வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி சமையலறையில் வேலைகள் முடிந்ததும் ஸ்ப்ரே பண்ணிவிட்டால் கரப்பான் பல்லி பூச்சி எறும்பின் தொல்லை அடியோடு இல்லாமல் போகும்.