பிரித்தானிய குடும்ப விசா விதிகள் எளிதாக்கப்படவேண்டும் என புலம்பெயர்தல் ஆலோசனை அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
பிரித்தானிய குடும்ப விசா விதிகள்…
பிரித்தானியாவில் ஆட்சி செய்த ரிஷி சுனக் தலைமையிலான முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு, பிரித்தானியாவில் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் வாழ அழைத்துக்கொள்ளவேண்டுமானால், அவர்கள் குறைந்தபட்சம் 29,000 பவுண்டுகள் ஆண்டு வருவாய் உடையவர்களாக இருக்கவேண்டும் என்ற விதியைக் கொண்டுவந்தது.
அதை 38,700 பவுண்டுகளாக உயர்த்தவும் ரிஷி அரசு திட்டம் வைத்திருந்தது.
இந்நிலையில், முந்தைய அரசின் விதிகளை மீளாய்வு செய்ய லேபர் அரசு உத்தரவிட்டிருந்தது.
மீளாய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள புலம்பெயர்தல் ஆலோசனை கமிட்டி, வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் வாழ அழைத்துக்கொள்ளவேண்டுமானால், அவர்கள் ஈட்டவேண்டிய ஆண்டு வருவாய் குறைந்தபட்சம் 23,000 பவுண்டுகளிலிருந்து 25,000 பவுண்டுகளாக இருக்கவேண்டும் என பரிந்துரைத்துள்ளது.