மணமேடையில் மணப்பெண்னுக்கு நெற்றியில் குங்குமம் இடுகையில் மணமகனின் கை நடுங்கியதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் இந்தியாவின் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில திருமணங்கள் தாலி கட்டும் நேரத்தில், சிறிய காரணத்திற்காக நின்று போன செய்திகளை பார்த்துள்ளோம். அப்படியாக இந்தியாவில் கடைசி நேரத்தில் ஒரு திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
உறவினர்கள் க்ஷாக்
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நேற்று (10) பெற்றோர்கள் நிச்சயித்த திருமணத்தில் மணமகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், படை சூழ பெண் வீட்டாரின் வீட்டிற்கு ஊர்வலமாக வருகை தந்துள்ளார்.
மணமேடையில் அனைத்து சடங்குகளும் முடிந்த பின்னர், பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைக்கும் சடங்கு நடைபெற்றது. இதன் போது, மணமகன் பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது, அவரின் கை நடுங்கியுள்ளது.
இதனை பார்த்த மணப்பெண், மணமகனுக்கு உடலில் ஏதோ குறை உள்ளது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த திருமணம் எனக்கு வேண்டாம் என கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனை கண்ட, இரு வீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர். மணமகன் வீட்டார், பெண்ணை சமாதானப்படுத்த முயன்றும், மணப்பெண் உறுதியாக இருந்ததால், திருமணம் நிறுத்தப்பட்டது.

திருமணங்கள் எத்தனையோ காரணங்களுக்காக நின்று போயிருக்கின்ற சம்பவங்கள் உள்ளன. ஆனால் மாப்பிள்ளை கைநடுங்கியதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.