பிரான்சில்(France) வருகிற சில மாதங்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடைசெய்யும் புதிய சட்டம் நடைமுறைக்கும் வரும் என்று நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன்(Emmanuel Macron) சமீபத்தில் அறிவித்துள்ளார்.
மெக்ரோன் கூறியதாவது, “சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் 15 வயதுக்கு கீழான சிறுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் அவர்கள் தவறான பாதையில் செல்லும் ஆபத்து அதிகரித்து, வன்முறை நிகழ்வுகளில் ஈடுபடுவதை முன்வைக்கிறது.
சிறுவர்கள் நாட்டு எதிர்கால மனித வளம் என்பதால், அவர்களின் மனப்பாங்கு மற்றும் நெறி சரிவடையும் சூழலை உருவாக்குவது ஆபத்தானது.” என அவர் கவலை வெளிப்படுத்தினார்
இந்த நிலையில், சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.
ஆனால், இந்த அனுமதி கிடைக்காவிட்டால், பிரான்சில் 15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைத்தளங்களில் முழுமையாக பயன்படுத்துவதை தடுக்கும் சட்டம் கடுமையாக நடைமுறைக்கு வரும்.




















