கணவரால் சுவிஸ்லாந்துக்கு அழைக்கப்பட்ட மனைவி காதலனுடன் தலை மறைவாகியதால் மனைவி மேல் உள்ள கோபத்தில் கணவர் மனைவியுடன் சேர்ந்து திரிந்த புகைப்படம் மற்றும் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
விவாகரத்துப் பெற்று வாழ்ந்து வந்த 43 வயதான வவுனியாவைச் சேர்ந்த சுவிஸ்லாந்தில் வாழும் நபர் ஒருவர் கடந்த வருட இறுதிப் பகுதியில் வவுனியாவில் வைத்து திருமணம் முடித்த 27 வயதான யுவதி தனது கணவரால் சுவிஸ்லாந்துக்கு அழைக்கப்பட்ட போது சூரிச் விமானநிலையத்தில் வந்து இறங்கி சில மணி நேரங்களிலேயே இன்னொரு இளைஞனுடன் தலைமறைவாகியுள்ளார்.
சூரிச் விமான நிலையத்தில் வந்திறங்கிய தனது மனைவியைக் காணவில்லை என பொலிசாரிடம் முறையிட்ட போது பொலிசார் சிசிரிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து பார்த்த போது குடும்பஸ்தரின் மனைவி இன்னொரு இளைஞனுடன் சென்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த யுவதி தனது சொந்த விருப்பின் பேரில் இளைஞனுடன் சென்றுள்ளதாக குடும்பஸ்தருக்கு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த குடும்பஸ்தருக்கு தொலைபேசி மூலம் தொடர்மேற்றகொண்ட அந்த பெண் தனக்கு செலவு செய்த பணம் மற்றும் தாலிக்கொடி,நகைகளுக்காக பணத்தை மீளவும் திரும்பச் செலுத்துவதாக கூறியதுடன் தான் ஏற்கனவே காதலித்து வந்தவருடன் சேர்ந்து வாழப் போவதாக கூறியுள்ளார்.




















