துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்கு உதவிய சந்தேக நபரொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் நீர்கொழும்பு வலய குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2023.11.26 தினத்தன்று சீதுவ-கொட்டுகொட பிரதான வீதியில் ஆண் மற்றும் பெண்ணொருவரை T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி சுட்டுக் கொலை செய்ய முயற்சித்ததில் அவர்கள் பலத்த காயமடைந்தனர்.
அதன்படி, நேற்று (15) பிற்பகல் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 20 கணுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்த மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த சந்தேகநபர் 15 கிராம் 290 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 2 கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டு சீதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபர் நீர்கொழும்பை வசிக்கும் 27 வயதுடையவர்.
சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















