இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், நாட்டின் வெளிநாட்டுக் கடன் 63.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
எனினும், 2024 ஆம் ஆண்டில், இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்து 68 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியால் இலங்கைக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் பொறுப்புகள் அதிகரித்ததன் காரணமாக வெளிநாட்டுக் கடன் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.



















