கம்பஹாவில் பமுனுகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எப்பாமுல்ல, ஜூட் வத்த பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் இன்று (19) அதிகாலை பெண்ணொருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
45 முதல் 50 வயது மதிக்கத்தக்க 05 அடி உயரமுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




















